Saturday, 15 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள் -7

தீக்குளிக்காத விட்டில்கள் -7 

திடீரென்று ராதாவுக்கு க்வார்ட்டர்ஸை முற்றிலும் மாற்றியமைத்து அலங்கரிக்க வேண்டும் என்று வெறி பிறந்ததுஇளம் பச்சை வண்ணத்தில் தன் படுக்கையறைக்கு ஸ்நோசெம் பூச ச் செய்தாள்கட்டில்களை வேறு திசைக்கு மாற்றினாள்மாடர்ன் பெயிண்டிங்குகளை மாட்டினாள்ஆளுயரத்திற்குக் கண்ணாடி பதித்த ஒரு டிரஸ்ஸிங் டேபிளைக் கல்கத்தாவிலிருந்து வாங்கி வரச் செய்தாள்.
காப்டனின் மனைவிக்காக அந்த டிரஸ்ஸிங் டேபிள் கௌஹாத்தியைக் கடந்து காசி குன்றுகளின் மீதேறி அவள் படுக்கையறைக்கு வந்ததுகாப்டன் ஹயக்ரீவனுக்கு அதிக மகிழ்ச்சிகலாரசனையுள்ள ஒரு மனைவி தனக்கு வாய்த்திருப்பதைப் பெருமையடித்துக் கொள்ள அவள் எத்தனை சந்தர்ப்பங்களைத் தருகிறாள்?
கண்ணாடியில் ராதா தெரிந்தாள்கட்டிலில் தூக்கம் வராது புரளும் ராதா இளமையின் வசந்தோற்சவ காலத்தில் ஒவ்வோர் அங்கங்களிலும் தாபம் பூத்துக் குலுங்ககாசிக்  குன்றின் கானகங்களிலும் காய்ந்து வீண்போகும் நிலவின் கிரணங்கள் பிரதிபலிக்ககண்ணாடியில் கண்ணனின் வரவிற்காகக் காத்திருக்கும் ராதா.
ஒருநாள் குளித்து முடித்து டிரஸ் மாற்றிக்கொள்ள டவல் சுற்றிய ஈரத்தலையோடு அவள் அந்தக் கண்ணாடி முன்பு வந்து நின்றபோது விசித்திரமானதொரு நினைப்பு வந்ததுஅந்த அறையில்அவள் பாத்திரமாக நடித்துக்கொண்டிருக்கும் நாடகத்தில் எல்லா வேஷங்களையும் களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்கவேண்டுமென்று தோன்றிற்றுஅவள் அந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் ஆடையேதுமின்றி நின்றாள்.
'இது யார்...? நீ யார்...? ராதா வா....? நீ இவ்வளவு அழகா...? திருச்சூரில் குருவாயூரப்பனுக்கு அரைக்கும் சந்தனத்தோடு மாலை மயக்கத்தில் சிந்துகின்ற செம்மையைக் கலந்த மாதிரி இது என்ன ஒரு நிறம்...? மனித உடம்பின் தசைத் திரளில் இப்படி ஒரு சங்கீத லயத்தை சிருஷ்டிக்க முடியுமாகறுப்பு முத்துக்களாய் கழுத்தின் கீழும் மார்பின் மீதும்  இரைந்திருக்கும் மச்சங்களில்குறும்பு சுடர்விடும் கண்களின் கருமையில்உல்லாசம் முழுசாய் மலர்ந்து பூத்ததுபோல் சிவந்து நிற்கும் உதடுகளில்பூரித்து விம்மி நிற்கும் மார்பகங்களில்நளினமாய் சரிந்து வளைந்த இடைகளில்பிரு ஷ்டங்களில்தொடைகளில் புஜங்களில்முன்னங்கால்களில் சௌந்தர்யத்தின் அமிர்த ஊற்றுக்குள் துளும்பி நிற்கின்றனகாப்டன் இவற்றை நீங்கள் அறிவீர்களாஇவற்றை அறிமுகம் செய்ய முடியாதுஇவை ரகசியங்கள்ஆழ்ந்துமுங்கிமுக்குளித்துதேடிஅளைந்துவிலக்கிஓடி ஒளிந்துபுதைந்துநீந்துவோனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்ட ரகசியங்கள்இவற்றின் சீர் சிதையும் முன் சூடு ஆறுமுன்இவற்றின் வண்ணத் திரட்டு மங்குமுன்இவற்றின் நறுமண லாகிரி மறையுமுன்இவற்றின் புஷ்டி அகன்று விடுமுன்இவை நிவேதனமாக்கப்பட்டு விடவேண்டும். ஓர் ஆணுக்கு.ராதா என்ற பாத்திரத்தின் பிரசாதத்தை ஏற்கவேண்டிய ஆண் யார்அவன் எங்கே?
திடீரென்று யாரோ கதவைத் திறந்து மூடிய மாதிரி ஓர் ஒலி கேட்டதாக ராதா உணர்ந்தாள்அது காற்றா...? இல்லை கற்பனையா...? கதவைத் தாளிடாதது என்ன முட்டாள் தனம்...?
ராதா வேகமாகப் புடவையைச் சுற்றிக்கொண்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்கம்பி வலையடித்த ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மரப்பாலத்தைப் பார்த்துக்கொண்டு முதுகு திரும்பி ஆர்டலி தெரிந்தான்ராதாவுக்குச் சட்டென்று உடம்பு சில்லிட்டது.
ஸோ... இவன் பார்த்துவிட்டான்யாருக்கோ நிவேதனமாக்கப்படவேண்டிய ரகசியப் பேழை திறந்து கிடப்பதை இவன் பார்த்துவிட்டான்முதன்முறையாகஅந்த ஆர்டர்லி ஷியாம் சிங் ஓர் ஆண் என்பது அவளுக்கு உறைத்தது.
"ஆர்டர்லி...” அவள் சீமாட்டி போல் கூப்பிட்டாள்.
"மேம்.. ஸாப்...” அவன் ஓடிவந்து குற்றப் பதைப்பதை மறைக்கும் முகபாவத்தோடு நின்றான்.
"க்யா... பாத்...?”
"குச் நை மேம்... ஸாப்... ஆப் கோ ஏக் கத்...” அவன் ஒரு கடிதத்தை நீட்டினான்அவள் அதை வாங்கியதும் மிகவும் பணிவோடு அவன் ஒதுங்கி நின்றான்ராதா ஒரு கண் வீச்சில் அவனை அளப்பதுபோல் நோட்டமிட்டாள்.
ஷியாம் சிங்குக்குப் போன வருஷம் கல்யாணம் ஆயிற்றுஅவன் சர்வீஸுக்கு வந்து இரண்டு வருடமாகப் போகிறதுஇன்னும் அவன் முகத்திலிருந்து இளமையின் இன்னொசன்ஸ் போகவில்லைமேம்.. சாப்பின் நிர்வாண உடம்பு அவனுக்குள் என்ன சலனங்களை ஏற்படுத்தின...?
ராதாவின் பார்வையைச் சந்திக்காமல்அவள் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதையே உணராமல் அவன் கண்கள் தாழ்ந்திருந்தனசாதாரண ஜவான்நாயக் ப்ரமோஷனுக்காக காப்டனின் க்வார்ட்டஸில் அடிமாடு போல உழைத்துக் கொண்டிருக்கிறான்பஞ்சாபில் அவனுடைய இளம் மனைவி அடுத்த லீவை எதிர்பார்த்து கோதுமை வயல்களில் பெருமூச்சு விட்டுக்கொண்டு நடந்துபோய் நதியோரத்தில் துணி துவைக்கும்போதுபோன லீவில் அவன் வந்த நினைவுகளை அசை போடுகிறாள்.
ராதா அவன்மீது அனுதாபத்தோடு கடிதத்தைப் பிரித்தாள்அது லீனா எழுதிய கடிதம்சிங்கப்பூரில் இருந்து காந்தா ஊருக்கு வந்த ஒருவரிடம்  ஷிபான் சேலை ஒன்று பரிசாக அனுப்பியிருந்ததாகவும்அவளும் ஸ்ரீதரனும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விவரித்திருந்தாள்எல்லாவற்றையும் எழுதிவிட்டு தங்களுக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்று அன்னை மேரியிடம் பிரார்த்தனை ஜபம் செய்யும்படி கோரியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தாள்.
ஆக ஸ்ரீதரனுக்கும் குழந்தை இல்லை...! குழந்தை இல்லாத ஏக்கம் அவனுக்கும் இருக்கிறதுஅவன் என்ன நினைப்பான்...? ஜாதி ஜெனத்தையெல்லாம் பிரிந்து வந்ததற்கு இதுதான் விதி தந்த தண்டனை என்று நினைப்பானோமாற்றிப் போட்டு யோசித்தாள்.
ஜாதி ஜெனத்தை எல்லாம் பிரிய விரும்பாத தனக்கு விதி தந்த தண்டனைதான் இதுவா....? ஒரு குழந்தை... ஒரு குழந்தை...
அவள் இரவு நேரங்களில் அகாலமாக காப்டன் ஹயக்ரீவனைத் தொந்தரவு செய்யலானாள்நாலைந்து முறை அப்படிச் செய்துவிட்டு ஹயக்ரீவன் அந்தப் பெரிய உடம்பைப் புரண்டு புரண்டு அசைத்துக் கொண்டு புஸ்... புஸ்... என்று பெருமூச்சு வர வாயைக் கேவுவதுபோல் பிளந்து பிளந்து மூச்சுவிடுவது அவளுக்கே பரிதாபமாகப் பட்டது.
அவரைக் கொடுமைப்படுத்துகிற உணர்வு மேலிட கட்டிலில் கவிழ்ந்து படுத்து தலையணையில் வாய் புதைத்துதன் துக்கத்தை எல்லாம் கரைக்க முயன்றாள்
பொழுது விடிந்தது. 
கண்விழிக்கும்போது  நேர்ந்தது நினைத்தது எல்லாம் பிடிக்கவில்லை .குமட்டியது.தனக்குப் பைத்தியமா? இப்படியே எல்லாம் போய் விடுமா?
 ஒருநாளும், ஒருபோதும் எனக்கு விமோசனம் வராதா?[தொடரும்]

1 comment:

  1. ஆக ஸ்ரீதரனுக்கும் குழந்தை இல்லை...! குழந்தை இல்லாத ஏக்கம் அவனுக்கும் இருக்கிறது. அவன் என்ன நினைப்பான்...? ஜாதி ஜெனத்தையெல்லாம் பிரிந்து வந்ததற்கு இதுதான் விதி தந்த தண்டனை என்று நினைப்பானோ? மாற்றிப் போட்டு யோசித்தாள்.
    ஜாதி ஜெனத்தை எல்லாம் பிரிய விரும்பாத தனக்கு விதி தந்த தண்டனைதான் இதுவா....? ஒரு குழந்தை... ஒரு குழந்தை...

    பார்வை கோணங்கள்...

    சலிப்புறச்செய்யாத சீரான நடை இயல்பு... சிறப்பென்று சொல்ல எதுவுமில்லை.

    ReplyDelete