Saturday, 15 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள் -7

தீக்குளிக்காத விட்டில்கள் -7 

திடீரென்று ராதாவுக்கு க்வார்ட்டர்ஸை முற்றிலும் மாற்றியமைத்து அலங்கரிக்க வேண்டும் என்று வெறி பிறந்ததுஇளம் பச்சை வண்ணத்தில் தன் படுக்கையறைக்கு ஸ்நோசெம் பூச ச் செய்தாள்கட்டில்களை வேறு திசைக்கு மாற்றினாள்மாடர்ன் பெயிண்டிங்குகளை மாட்டினாள்ஆளுயரத்திற்குக் கண்ணாடி பதித்த ஒரு டிரஸ்ஸிங் டேபிளைக் கல்கத்தாவிலிருந்து வாங்கி வரச் செய்தாள்.
காப்டனின் மனைவிக்காக அந்த டிரஸ்ஸிங் டேபிள் கௌஹாத்தியைக் கடந்து காசி குன்றுகளின் மீதேறி அவள் படுக்கையறைக்கு வந்ததுகாப்டன் ஹயக்ரீவனுக்கு அதிக மகிழ்ச்சிகலாரசனையுள்ள ஒரு மனைவி தனக்கு வாய்த்திருப்பதைப் பெருமையடித்துக் கொள்ள அவள் எத்தனை சந்தர்ப்பங்களைத் தருகிறாள்?
கண்ணாடியில் ராதா தெரிந்தாள்கட்டிலில் தூக்கம் வராது புரளும் ராதா இளமையின் வசந்தோற்சவ காலத்தில் ஒவ்வோர் அங்கங்களிலும் தாபம் பூத்துக் குலுங்ககாசிக்  குன்றின் கானகங்களிலும் காய்ந்து வீண்போகும் நிலவின் கிரணங்கள் பிரதிபலிக்ககண்ணாடியில் கண்ணனின் வரவிற்காகக் காத்திருக்கும் ராதா.
ஒருநாள் குளித்து முடித்து டிரஸ் மாற்றிக்கொள்ள டவல் சுற்றிய ஈரத்தலையோடு அவள் அந்தக் கண்ணாடி முன்பு வந்து நின்றபோது விசித்திரமானதொரு நினைப்பு வந்ததுஅந்த அறையில்அவள் பாத்திரமாக நடித்துக்கொண்டிருக்கும் நாடகத்தில் எல்லா வேஷங்களையும் களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்கவேண்டுமென்று தோன்றிற்றுஅவள் அந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் ஆடையேதுமின்றி நின்றாள்.
'இது யார்...? நீ யார்...? ராதா வா....? நீ இவ்வளவு அழகா...? திருச்சூரில் குருவாயூரப்பனுக்கு அரைக்கும் சந்தனத்தோடு மாலை மயக்கத்தில் சிந்துகின்ற செம்மையைக் கலந்த மாதிரி இது என்ன ஒரு நிறம்...? மனித உடம்பின் தசைத் திரளில் இப்படி ஒரு சங்கீத லயத்தை சிருஷ்டிக்க முடியுமாகறுப்பு முத்துக்களாய் கழுத்தின் கீழும் மார்பின் மீதும்  இரைந்திருக்கும் மச்சங்களில்குறும்பு சுடர்விடும் கண்களின் கருமையில்உல்லாசம் முழுசாய் மலர்ந்து பூத்ததுபோல் சிவந்து நிற்கும் உதடுகளில்பூரித்து விம்மி நிற்கும் மார்பகங்களில்நளினமாய் சரிந்து வளைந்த இடைகளில்பிரு ஷ்டங்களில்தொடைகளில் புஜங்களில்முன்னங்கால்களில் சௌந்தர்யத்தின் அமிர்த ஊற்றுக்குள் துளும்பி நிற்கின்றனகாப்டன் இவற்றை நீங்கள் அறிவீர்களாஇவற்றை அறிமுகம் செய்ய முடியாதுஇவை ரகசியங்கள்ஆழ்ந்துமுங்கிமுக்குளித்துதேடிஅளைந்துவிலக்கிஓடி ஒளிந்துபுதைந்துநீந்துவோனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்ட ரகசியங்கள்இவற்றின் சீர் சிதையும் முன் சூடு ஆறுமுன்இவற்றின் வண்ணத் திரட்டு மங்குமுன்இவற்றின் நறுமண லாகிரி மறையுமுன்இவற்றின் புஷ்டி அகன்று விடுமுன்இவை நிவேதனமாக்கப்பட்டு விடவேண்டும். ஓர் ஆணுக்கு.ராதா என்ற பாத்திரத்தின் பிரசாதத்தை ஏற்கவேண்டிய ஆண் யார்அவன் எங்கே?
திடீரென்று யாரோ கதவைத் திறந்து மூடிய மாதிரி ஓர் ஒலி கேட்டதாக ராதா உணர்ந்தாள்அது காற்றா...? இல்லை கற்பனையா...? கதவைத் தாளிடாதது என்ன முட்டாள் தனம்...?
ராதா வேகமாகப் புடவையைச் சுற்றிக்கொண்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள்கம்பி வலையடித்த ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மரப்பாலத்தைப் பார்த்துக்கொண்டு முதுகு திரும்பி ஆர்டலி தெரிந்தான்ராதாவுக்குச் சட்டென்று உடம்பு சில்லிட்டது.
ஸோ... இவன் பார்த்துவிட்டான்யாருக்கோ நிவேதனமாக்கப்படவேண்டிய ரகசியப் பேழை திறந்து கிடப்பதை இவன் பார்த்துவிட்டான்முதன்முறையாகஅந்த ஆர்டர்லி ஷியாம் சிங் ஓர் ஆண் என்பது அவளுக்கு உறைத்தது.
"ஆர்டர்லி...” அவள் சீமாட்டி போல் கூப்பிட்டாள்.
"மேம்.. ஸாப்...” அவன் ஓடிவந்து குற்றப் பதைப்பதை மறைக்கும் முகபாவத்தோடு நின்றான்.
"க்யா... பாத்...?”
"குச் நை மேம்... ஸாப்... ஆப் கோ ஏக் கத்...” அவன் ஒரு கடிதத்தை நீட்டினான்அவள் அதை வாங்கியதும் மிகவும் பணிவோடு அவன் ஒதுங்கி நின்றான்ராதா ஒரு கண் வீச்சில் அவனை அளப்பதுபோல் நோட்டமிட்டாள்.
ஷியாம் சிங்குக்குப் போன வருஷம் கல்யாணம் ஆயிற்றுஅவன் சர்வீஸுக்கு வந்து இரண்டு வருடமாகப் போகிறதுஇன்னும் அவன் முகத்திலிருந்து இளமையின் இன்னொசன்ஸ் போகவில்லைமேம்.. சாப்பின் நிர்வாண உடம்பு அவனுக்குள் என்ன சலனங்களை ஏற்படுத்தின...?
ராதாவின் பார்வையைச் சந்திக்காமல்அவள் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதையே உணராமல் அவன் கண்கள் தாழ்ந்திருந்தனசாதாரண ஜவான்நாயக் ப்ரமோஷனுக்காக காப்டனின் க்வார்ட்டஸில் அடிமாடு போல உழைத்துக் கொண்டிருக்கிறான்பஞ்சாபில் அவனுடைய இளம் மனைவி அடுத்த லீவை எதிர்பார்த்து கோதுமை வயல்களில் பெருமூச்சு விட்டுக்கொண்டு நடந்துபோய் நதியோரத்தில் துணி துவைக்கும்போதுபோன லீவில் அவன் வந்த நினைவுகளை அசை போடுகிறாள்.
ராதா அவன்மீது அனுதாபத்தோடு கடிதத்தைப் பிரித்தாள்அது லீனா எழுதிய கடிதம்சிங்கப்பூரில் இருந்து காந்தா ஊருக்கு வந்த ஒருவரிடம்  ஷிபான் சேலை ஒன்று பரிசாக அனுப்பியிருந்ததாகவும்அவளும் ஸ்ரீதரனும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விவரித்திருந்தாள்எல்லாவற்றையும் எழுதிவிட்டு தங்களுக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்று அன்னை மேரியிடம் பிரார்த்தனை ஜபம் செய்யும்படி கோரியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தாள்.
ஆக ஸ்ரீதரனுக்கும் குழந்தை இல்லை...! குழந்தை இல்லாத ஏக்கம் அவனுக்கும் இருக்கிறதுஅவன் என்ன நினைப்பான்...? ஜாதி ஜெனத்தையெல்லாம் பிரிந்து வந்ததற்கு இதுதான் விதி தந்த தண்டனை என்று நினைப்பானோமாற்றிப் போட்டு யோசித்தாள்.
ஜாதி ஜெனத்தை எல்லாம் பிரிய விரும்பாத தனக்கு விதி தந்த தண்டனைதான் இதுவா....? ஒரு குழந்தை... ஒரு குழந்தை...
அவள் இரவு நேரங்களில் அகாலமாக காப்டன் ஹயக்ரீவனைத் தொந்தரவு செய்யலானாள்நாலைந்து முறை அப்படிச் செய்துவிட்டு ஹயக்ரீவன் அந்தப் பெரிய உடம்பைப் புரண்டு புரண்டு அசைத்துக் கொண்டு புஸ்... புஸ்... என்று பெருமூச்சு வர வாயைக் கேவுவதுபோல் பிளந்து பிளந்து மூச்சுவிடுவது அவளுக்கே பரிதாபமாகப் பட்டது.
அவரைக் கொடுமைப்படுத்துகிற உணர்வு மேலிட கட்டிலில் கவிழ்ந்து படுத்து தலையணையில் வாய் புதைத்துதன் துக்கத்தை எல்லாம் கரைக்க முயன்றாள்
பொழுது விடிந்தது. 
கண்விழிக்கும்போது  நேர்ந்தது நினைத்தது எல்லாம் பிடிக்கவில்லை .குமட்டியது.தனக்குப் பைத்தியமா? இப்படியே எல்லாம் போய் விடுமா?
 ஒருநாளும், ஒருபோதும் எனக்கு விமோசனம் வராதா?[தொடரும்]

Friday, 14 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள் -6

தீக்குளிக்காத விட்டில்கள் -6
ராதா ஷில்லாங்கிற்குத் திரும்பவேண்டியிருந்தது.
 ஷில்லாங்கிலே இரவுகள் நீளமாயிருந்தனபள்ளிகொண்டாவை விட .பகல் அதைவிட நீளமாயிருந்ததுசெய்வதற்கு ஒரு வேலையுமில்லைசமைப்பதற்கு ஒரு குக்எடுபிடி வேலைகளுக்கு ஒரு ஆர்டர்லிசிக்கன் சமைப்பதற்கு மட்டும் அவள் போவாள்அதைச் செய்..., இதைச் செய் என்று உத்தரவு கொடுப்பாள்பின் வேலையே இல்லாத நெடிய மௌனம்.
வந்த புதிதில் ஆபிஸர் மனைவிகள் சிலர் அவளைக் காண வந்தார்கள்அவளை வீட்டுக்கு அழைத்தார்கள்.
உத்யோகப் போட்டிகளின்... அந்தஸ்துப் பகட்டுகளின் மத்தியில் உழன்று பாசாங்கு செய்கிற சலிப்பூட்டுகின்ற மந்தமான உலகம்கற்பித்துக்கொண்ட விரோதங்களுக்காக ஒருத்திக்கு எதிராக இன்னோருத்தி கட்சி சேர்க்கும் உலகம் அது...
ஒருநாள் மிஸஸ்சின்ஹா ஸ்காட்ச்சை கிளாஸில் ஊற்றி நீட்டினாள்இன்னொரு நாள் மிஸஸ் பூனாச்சா சீட்டாடக் கூப்பிட்டாள்மேஜர் குரியாகோஸின் மனைவி ஒருபடி அதிகமாகப் போனாள்ஒரு சிகரெட்டை உருவி எடுத்துதான் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு ராதாவுக்கு ஒன்றை நீட்டினாள்.
“ட்ரை திஸ்.”
“நோ தாங்க்யூ
மிஸஸ் குரியாகோஸ் அவளை ஏளனமாகப் பார்த்தாள்அனேகமாக அவர்கள் எல்லார் மத்தியிலும் விமன்ஸ் லிபரேஷன் ஃபாஷனாக இருந்தது.
ஆனால் அதன் பின்னணியில் பெண்ணாகப் பிறந்துவிட்ட சாபத்தின் பளுவைச் சுமக்கிற துக்கம் சீற்றத்தின் மாறுவேஷம் போட்டிருந்தது.
   ராதா தன் கூட்டுக்குள் பின்வாங்கினாள். 'அன்சோஷல்'  என்றும் ‘கண்ட்ரிகூஸ் ’ என்றும் கிட்டும்   பட்டங்களை விட சுயத்துவம் முக்கியமாக இருந்தது
காப்டன் ஹயக்ரீவனுக்கு கான்ஃபரன்ஸ்கள்பார்ட்டிகள்பெரேடுகள் என்று நிறைய வேலை இருந்ததுராதாவின் பகல்கள் நீளமாயின.
க்வார்ட்டர்ஸை அலங்கரிக்கத் தொடங்கினாள்ஒவ்வொரு பட்டாலியனிலிருந்து டிரான்ஸ்ஃபராகும் போதும் காப்டன் ஹயக்ரீவன் என்ற அவளது ஹரிக்குக் கிடைத்த ட்ராபிகள்அன்பளிப்புகள்துப்பாக்கிகள் தேய்க்கப்பட்டன..., துலங்கின..., பளபளத்தனகர்ட்டன்கள் மாற்றப்பட்டனட்ராயிங் ரூமை அவளது சித்திர வேலைப்பாடுகள் அலங்கரித்தனக்வார்ட்டர்ஸின் உள்ளமைப்பே முற்றிலும் மாறிற்று
அப்போதும் பகலின் நீளம் குறையவில்லை.
“ஸ்ப்லெண்டிட்... மார்வலஸ்...” என்று பாராட்டுக்களைத் தாராளமாக அள்ளி வீசிவிட்டுவிஸ்கியில் மூழ்கி சீக்கிரமாக காப்டன் ஹரி தூங்கிப் போனார்இரவுகளில் அவள் விழித்திருந்தாள்ஹீட்டரும் விழித்திருந்தது.
அவள் தன்னை மறந்து உறங்கும் ஹரியிடம் ஓசையின்றித் தனக்குள் கேட்டுக்கொண்டாள் 
'காப்டன் நீங்கள் எதற்குக் கல்யாணம் பண்ணிக் கொண்டீர்கள்உங்கள் வாழ்வின் எந்தக் காலியிடத்தை நிரப்ப நான் அவசியப் பட்டேன்உடம்பின் தேவையா... இல்லை..யூ டோன்ட் ரெலிஷ் செக்ஸ்... அது உங்களுக்கு ஒரு யாந்திரீகமான கடமைஎன்னைக் குழந்தையாக நினைக்கிறீர்கள்குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற நினைக்கிற பெரிய மனிதன்போல உங்களைப் பாவித்துக் கொள்கிறீர்கள்அதற்காகத்தான் கல்யாணம் செய்துகொண்டீர்களாஉங்கள் சமூக அந்தஸ்துக்குப் பட்டதாரியாக ஒரு மனைவி வேண்டும்உங்கள் மனசுக்குக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்க குழந்தை மாதிரி ஒரு பெண் வேண்டும்
அவள் உங்களை அதிகாரம் செய்யவேண்டும்அவளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்து அதில் ஒரு சுகம் காணவேண்டும். இதற்காகவா?
'நான் பிறர் விருப்பங்களை ஏந்தி நிற்கும் பாத்திரம்.
நான் என்றும் பாத்திரமாகவே இருக்கிறேன்செத்துக்கொண்டிருக்கும் வைதீகத்திற்கும் என் சுயபலி தேவைப்பட்டதுதேவைப்பட்டதா இல்லைதேவைப்பட்டதாக நான் நினைத்து கொண்டேனாஎன் குடும்பத்தின் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானேன்இப்போது காப்டனின் மனைவி என்ற சமூக மரியாதை.
‘பாத்திரமாகு... ராதா பாத்திரமாகு...!’
மனம் கண்ணனுக்குத்தாவியது 
‘கண்ணா உன் நம்பிக்கைக்குதவிக்கின்ற உன் இதயத்தில் பிறந்த அவா ஒன்றிற்கு மட்டும் நான் பாத்திரமாகவில்லைகாதல்காமம்பிரேமைபிரியம்யார் எந்தப் பெயரில்  வேண்டுமானாலும் அதை அழைத்துக் கொள்ளட்டும்அது ஒரு சத்தியம்அற்பாயுசானாலும்அது ஒரு சத்தியம்இந்தப் பாவனை என்ற சவக்கிடங்குகளில் சமூக அந்தஸ்து என்ற பொய் முகங்களில் காணமுடியாத அக்னி சொரூபமான சத்தியம்ஆனால் நான் அதைப் புறக்கணித்து விட்டேன்.
அப்பாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதுநீ எங்கே என்னைத் தேடி வந்துவிடுவாயோ என்று அவர் பயப்படுகிறார்கடைசி வரையும் நான் கிருஷ்ணமாச்சாரியின் மகளாயும்நரசிம்மாச்சாரியாரின் மகளாயும் வாழ்ந்து எனக்குள் பொசுங்கிப் பொசுங்கி பஸ்மீகரமாய் விடவேண்டும் என்று கூடார்த்தமாக விண்ணப்பிக்கிறார்கட்டளையிடுகிறார்.
கண்ணா நீ எங்கே... என்னைத் தேடி கல்கத்தா தாண்டிபிரம்மபுத்திராவைக் கடந்து கௌஹாத்தி தாண்டிவளைந்து வளைந்து ஓடி வயிற்றைப் புரட்டும் இந்த மலைப்  பாதைகளில் ஏறிகாசி குன்றுகளைக் கடந்து என்னைத் தேடி வருவாயாஅறுந்த வேரைத் தேடிக் கொண்டு நீ வருவாயா?
வா... கண்ணா வா... என் பகல்கள் முடிவேயில்லாத தாபத்தோடுவெறுமையோடுசவத்துவத்தோடு சாம்பலாகிக் கொண்டிருக்கின்றனஎன் இரவுகள் உன்மத்தம் பிடித்துப் போய் ஒரு மாற்றமுமில்லாத உற்சாகமற்ற இன்னொரு சூர்யோதத்திற்காக நீளுகின்றன.
வா... கண்ணா வா... இந்த நிர்விகார சூன்யத்திலிருந்து சில நிமிடங்களேனும் என்னை உயிர்ப்பிக்க வா...![தொடரும்]

Monday, 10 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள் .5

தீக்குளிக்காத விட்டில்கள் .5
-------------------------------------------------
[“ எதற்குமே சிஸ்டம் சரியில்லை”
“சிஸ்டம் சரியாகத்தான் இருக்கு; ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் விலை போயிருக்கு”
“மாற்றமுடியாதா?”
“முடியாது”
மாத்தறதுன்னு முடிவு பண்றவாள்ளாம் அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிவருடிகள்தானே என்று ஒரு கருத்து அவருக்குள் எழுந்தது .
“உருவாக்கப்பட்ட கலகம் உடனே அடங்கிவிடும், அது சமூகத்தோட ஒட்டுமொத்த சீற்றத்திலேருந்து பொறக்கலே...! சம்ஹாரம் வெறும் கலகமல்ல. சிருஷ்டிக்க வேண்டிய காலத்தில் சிருஷ்டிக்க வேண்டியவன் சம்ஹாரம்ங்கற பே ரால தல மறவா தப்பிச்சு ஓடிண்டு தப்புகள் செய்யப்படாது.”]

ஸ்ரீராமன் சன்னதி மண்டபத்துக்கு அருகே கல்பாவியிருந்த தளத்தில் கிருஷ்ணமாச்சாரி, ராதாஇருவரும் உட்கார்ந்திருந்தனர். கோயிலுக்குள் கூட்டமில்லை. அங்குமிங்கும் ஓரிருவர் தென்பட்டனர். கிருஷ்ணமாச்சாரியும் ராதாவையும் பார்த்து ஒதுங்கிப் போனார்கள்
“கண்ணன் வந்திருந்தான்...”
கிருஷ்ணமாச்சாரி மொட்டையாக ஆரம்பித்தார்.
முகம் நிர்ச்சலனமாக இருந்தது. ராதாவுக்கு ஏனோ ஷில்லாங் ராணுவ ஆஸ்பத்திரியிலிருக்கும் டாக்டர் மோன்ஸி ஜார்ஜின் ஞாபகம் வந்தது. எவ்வளவு சிக்கலான ஆபரேஷன் என்றாலும் அந்த ஆள் முகத்தில் நரம்பு அசையாது என்று காப்டன் ஹயக்ரீவன் அவளிடம் சொல்வார்.
தம்பி தங்கைகளோடு ஹயக்ரீவன் சினிமாவுக்குப் போயிருந்தார். என்றுமில்லாத அதிசயமாக அவர் “ கோயிலுக்குப் போயிட்டு வரலாம் வாம்மா” என்று அழைக்கவே, அவள் ஏதோ இருக்கிறது என்று புரிந்துகொண்டாள்.
அப்பாவுக்கு எப்படி ஒரு கருமுடிகூட இல்லாமல் தலை நரைத்துவிட்டது?
இந்த ரிடையர்மெண்ட் அவரை அன்றாடம் கொன்று கொண்டிருக்கிறதா?.
“எங்கிட்டே படிச்சவாள்ளே எத்தனையோ பேர் ஒசந்தும் போயிருக்கா..., தாழ்ந்தும் போயிருக்கா...! நான் ஏமாந்தும் போயுமிருக்கேன்..., அதிசயப்பட்டுமிருக்கேன். பகவத் சங்கல்பம் வேறே..., நாம போட்டுக்கற கணக்கு வேறே...”
“பகவத் சங்கல்பத்தைப் பற்றி பேசவா கூப்பிட்டு வந்தீர்கள்?”
“கண்ணன்... மணின்னா அப்படி ஒரு மணியா இருந்தவன். அவன்ட்ட நான் அதிகமா எதிர்பார்த்தேன்” அவர் தொண்டை ஏனோ அடைத்துக்கொண்டது. அவர் கனைத்துக் கொண்டு மேலே தொடர்ந்தார்.
ராதா அவரை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள்.
“போன பதினைஞ்சா நாள், நான் காத்தோட்டமா வெளித் திண்ணையிலே துண்டை விரிச்சுப் படுத்திருந்தேன். மானம் இருண்டுண்டு மழையும் பெய்யாமே, காத்தும் இல்லாமே ஒரு புழுக்கம். கண் அசந்திட்டிருக்கேன். ‘சார்’னு குரல் கேட்டது. கண்விழிச்சா கருப்பா மீசையும் தலைப்பாவுமா ஒருத்தன் நிக்கறான். எனக்கு யார்னே வௌங்கலே. இருட்டிலே கண்ணும் தெரியலே... யாருன்னு கேட்டேன்.
“பசுமாத்தூர் கண்ணன்னான்...”
நேக்கு தூக்கிவாரிப் போட்டது. எழுந்து உட்கார்ந்துண்டேன். அவன் நக்ஸல் ஆயிட்டதா கேள்விப்பட்டேன். கொலை வழக்கிலே போலிஸ் தேடறதுன்னு பேப்பர்லேயும் வாசிச்சேன்.”
ராதா குனிந்து வலது கைப் பெருவிரல் நகத்தால் நடுவிரல் நகத்தைக் கீறிக் கொண்டிருந்தாள்.
“என்னப்பா..., என்ன விஷயம்?”னு கேட்டேன்.
“போலிஸ் வந்துன்டிருக்கு. எனக்கு எங்கயாவது இந்த நைட் தங்கணும்னான். பேப்பர்ல நியூஸ் வாசிச்சதிலேருந்து அவனோட பேசனும்னு எனக்குத் தோனிண்டிருந்தது. அன்னியத் தேதி வரைக்கும் நான் சட்ட விரோதமா ஒன்னும் பண்ணலே. வாய்விட்டு அவன் கேக்கறப்ப என்னாலே மறுக்க முடியலே. அன்னிக்கு எதிராத்து வெளி ரூம்லே குடியிருக்கற டீச்சர், வெக்கேஷன்ல ஊருக்குப் போயிருந்தார். எப்பவும் ரூம் சாவி நம்மாத்துலதான் கொடுத்துட்டுப் போவார். அவனக் கூட்டிண்டு சாவியோட அங்கே போனேன். சாபிட்டயான்னு கேட்டேன். சாப்பிட்டேன்னான். பொய்ன்னு புரிஞ்சது. சித்த இரு வர்றேன்னு ஆத்துக்கு வந்தேன். கமலத்தை எழுப்பலே. அடுக்களைக்குப் போனேன். சோத்துப்பானையிலே தூத்தம் கொட்டி வச்சிருந்தா. அதான் இருந்தது. ஒரு டிபன் பாக்ஸிலே அதை அப்படியே கொட்டி எடுத்துண்டு, ஒரு ஊறுகாத் துண்டோட போனேன்.”
அவர் சட்டென்று நிறுத்திவிட்டு யோசித்தார்.
“மொதல்லே ரொம்ப மறுத்தான். அப்புறமா சாப்பிட்டான். கண்ணா உனக்கு என்ன வந்ததுன்னு கேட்டேன். அவன் பேசாம சிரிச்சான்.”
கிருஷ்ணமாச்சாரி பேசிக் கொண்டிருந்தார். நட்சத்திரம் மின்னுகின்ற, தென்னோலைகள் அசைகின்ற, கண்ணன் வந்த அந்த மௌனமான இரவின் சித்திரம் அவள் மனசில் விரிந்தது.
“சுருக்கமா சொல்லு. உனக்கு இந்தச் சமூகத்துப் பேர்ல ரொம்பக் கோவம்?”
“வெறும் கோபங்கறது சீக்கிரமா ஆறிடும் சார். ஏதோ போனஸ் சம்பள உயர்வு வேணும்னு போராடி கெடைச்சதும் அடுத்த டார்கெட்டுப் போக கேப் கொடுக்கற மாதிரி”
ஆனா நான் போராடறது வேற ஒண்ணுக்காக
“என்ன? “
“ஆல்ரைட். நேக்கு பதில் சொல்லு. வீடு சரியில்லேன்னு பண்ட பாத்திரங்களை வீசி எறிஞ்சு, இடிச்சு ஒடச்சு, இருக்கறவாளைக் குத்தி இம்சிச்சு... நீ என்ன சாதிக்கப் போறே?”
“பழசை இடிச்சாத்தான் புதுசைக் கட்ட முடியும்.”
“கண்டமானமா இடிச்சுடப்படாது. இடிக்கறவன் கையிலே கட்டறதுக்குத் திட்டான ப்ளான் வேணும். வெறுமனே இடிச்சுவிட்டுட்டு பின்னாடி எவனோ கட்ட வருவான்னு போயிடப்படாது...”
“இட் காண்ட் பி ஹெல்ப்ட். ஒருத்தன் இடிக்கணும். இன்னொருத்தன் கட்டணும். சம்ஹாரம்... பின்னாடி சிருஷ்டி...”
“சிருஷ்டிக்க வேண்டிவன் சம்ஹரிக்கப்படாது. இது சம்ஹாரமே இல்லே. சமூக மாற்றம். சமூகம் முழுவதுமே கிளர்ந்து ஒட்டுக்க நின்னு செய்யவேண்டிய காரியம். அதுக்குக் காலம் வேணும். ஜனங்களோட நம்பிக்கை வேணும். சித்தாந்தம் வேணும்.”
கோயிலும், ஸ்வாமியும், வைதீகமும், டிஸிப்ளினுமாய் ஒதுங்கியிருக்கின்ற கிருஷ்ணமாச்சாரி என்ற ரிடையர்ட் வாத்தியார் எப்படி மானசீகமாக இந்தச் சமூகக் கொந்தளிப்போடு ஒரு சம்பந்தம் வைத்திருக்கிறார் என்று புரிந்துகொண்டாள் ராதா.
“இதுவும் ஒரு சித்தாந்தம் தான் சார். ‘க்ரியேட். அன் அன்ரெஸ்ட் இட்வில் பிகெட் ரெவல்யூஷன். கலகத்தைச் சிருஷ்டி செய். அது புரட்சியைப் பெற்றெடுக்கும்.”
“ எதற்குமே சிஸ்டம் சரியில்லை”
“சிஸ்டம் சரியாகத்தான் இருக்கு; ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் விலை போயிருக்கு”
“மாற்றமுடியாதா?”
“முடியாது”
மாத்தறதுன்னு முடிவு பண்றவாள்ளாம் அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிவருடிகள்தானே என்று ஒரு கருத்து அவருக்குள் எழுந்தது .
“உருவாக்கப்பட்ட கலகம் உடனே அடங்கிவிடும், அது சமூகத்தோட ஒட்டுமொத்த சீற்றத்திலேருந்து பொறக்கலே...! சம்ஹாரம் வெறும் கலகமல்ல. சிருஷ்டிக்க வேண்டிய காலத்தில் சிருஷ்டிக்க வேண்டியவன் சம்ஹாரம்ங்கற பே ரால தல மறவா தப்பிச்சு ஓடிண்டு தப்புகள் செய்யப்படாது.”
ஆசிரியரும் மாணவனும் தர்க்கித்தனர்.
“சிருஷ்டின்னு நீங்க எதைச் சொல்றீங்க?”
“நீ சொல்ற அந்தச் சமூக மாற்றத்திற்கு வேண்டிய மனோநிலை. அது மாத்திரமே லட்சியமாய்க் கொண்ட மனுஷாள். ஒருத்தர் இல்லே... லட்சோப லட்சமா... ஒரு தலைவன் சொன்னா உயிரை விடற மாதிரி... ஒரு காந்தி மாதிரி... அவாளுக்குள்ளே அந்த லட்சிய பிராப்தியின் பேர்ல ஒரு திடசித்தம். அது சிருஷ்டி. அந்தச் சிருஷ்டி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லே.. ஒரு மனுஷன் அதுக்குன்னே பொறந்துவரணும்.பொழுபோக்காப்பேசக்கூடாது
கோயிலில் சந்தியாகால பூஜைக்குத் தவிலும் நாதஸ்வரமும் முழங்கின. பகலெல்லாம் தகித்த பூமியின் மீது சிரம பரிகாரம்செய்வது போன்ற காற்று மெல்லத் தவழ்ந்தது.
ராதா தந்தையைப் புதிய மரியாதையோடு பார்த்தாள்.
“அதுக்கு அவன் பதிலே சொல்லலே. காதிலே வாங்கிண்டவன்போல மௌனமா இருந்தான். நீ எங்கே இருக்கேன்னு நன்னா தெரிஞ்சு வச்சிருக்கான். நீ வந்தியான்னு விசாரிச்சான்.”
ராதாவுக்கு அதற்குமேல் அங்கு உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. ஆனால் எழுந்து போகவும் துணிவில்லை. அது அவளைக் காட்டிக் கொடுத்து விடும்.
“நான் சொன்னேன். அவன் கேட்டதைப் பார்த்தா ஒருவேளை உன்னைப் பார்க்க வருவானோன்னு தோணித்து. பி கேர்ஃபுல்” அவர் நிறுத்திக் கொண்டார்.
ஒரு நீண்ட மௌனம். அங்கே ஒரு பதில் தேவை.
ஆனால் ராதா அதைச் சொல்லவில்லை. மனசிற்குள் சொல்லிக்கொண்டாள்
ஸோ... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கறது. என்னை எச்சரிக்கறேள். என்னென்ன நடந்ததோ அதுக்காக என்னை மெச்சிக்கறேள். ஏதாவது நடந்துடப் போறதோன்னு கவலைப்படறேள். என்னமோ உங்களுக்குப் புரிஞ்சிருக்கறதே... சந்தோஷம்... அதுவரைக்கும் சந்தோஷம்! நான் இனிமே உங்களாண்டே ‘கில்டியா ஃபீல் பண்ண வாண்டாம்.
ஏதாவது பேசி அந்தச் சூழ்நிலையை லகுவாக்க வேண்டுமென்று ராதா விரும்பினாள்.
“பத்து நாள் வந்து எங்களோட ஷில்லாங்கிலே இருங்களேம்ப்பா. ஒரு சேஞ்ச் இருக்கும்”
“நான் எங்கேம்மா வரட்டும்? பிரயாணம் உடம்புக்கு ஒத்துக்கலே, மனசுக்கு'சேஞ்ச்’ தேவைப்படலே. நெறய புஸ்தகங்களை வாசிக்கறேன். ஒரு நர்சரி ஸ்கூல் வைக்கலாமான்னு யோசனை பண்ணிண்டிருக்கேன். பகவத் சங்கல்பம் எப்படியோ... பார்ப்போம். டயமாறது. கௌம்புவோமா?”
அவர் எழுந்து கொண்டார். (தொடரும் )

LikeShow more reactions
Comment

Tuesday, 4 July 2017

தீக்குளிக்காத விட்டில்கள்-4

தீக்குளிக்காத விட்டில்கள்-4
பள்ளிகொண்டாவிலே உத்திர ரங்கநாத சுவாமிக்குப் புஷ்பப் பல்லக்கு! சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தெல்லாம் திருவிழாக் கூட்டம் வந்து சேரும். வானவேடிக்கை உண்டு. வேலூரிலிருந்து மெல்லிசைக் கச்சேரி. தேர் போக வழி ஆயத்தம் செய்ய மின்சாரக் கம்பத்தின் உயரங்களில் வயர்மேன்கள் ஏறி தெருத் தெருவாக மின்கம்பி வயர்களை உயரத்தூக்கிக் கொண்டிருந்தனர். வெவ்வேறு கூடுகளுக்குப் பறந்துபோய் சொந்த ஊரில் திருவிழாவில் கூடுகிற எல்லோரையும் போல் ராதாவும் வந்திருந்தாள். காப்டன் ஹயக்ரீவனும் வந்திருந்தார்.
“மாப்பிள்ளைக்குத் தூத்தம் கொண்டு போ... டேய்..., அத்திம்பேர் இருக்கச்சே சினிமா பாட்டை கத்திண்டிருக்கப்படாது... அம்மா... ராதா, இந்த நாற்காலியைக் கொண்டுபோய் அவர் ரூமிலே போடு... நேக்கு ஈஸிசேர் போறும்...”
அப்பா தன் சிம்மாசனத்தைக் கூட விட்டுக் கொடுத்துவிட்டார். அந்த சிறிய, எளிய வீடு, காப்டன் ஹயக்ரீவன் வருகையால் அக்ரஹாரத்தில் ஒரு சமூக முக்கியத்துவம் பெற்றதில் பூரித்துக்கொண்டிருந்தது.
அவள் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்திருந்தாள்.
“காப்டன்... ஊரிலே வந்து விஸ்கி பாட்டிலைத் தேடப்படாது. நாம போறது புஷ்பப் பல்லக்குக்கு. பரம வைதீகமான நரசிம்மாச்சாரியர் ஆத்திலே டிஸிப்ளின்...! கிருஷ்ணமாச்சாரியார் ஆத்திலே இன்னிய தேதிவரை விஸ்கி பாட்டிலே நொழஞ்சது கிடையாது.”
“ஆஸ் பெர் யுவர் ஆர்டர்ஸ் மாடம்.”
“காப்டன்... ஒன் மோர் திங். பட்டு உடுத்திண்டுதான் நடமாடணும்.”
“உத்தரவு.”
காப்டனுக்கு ‘எடீக்வெட்’ டெல்லாம் போதித்து விட்டுத்தான் ராதா உடன் வந்தாள்.
வயதான கணவர்கள்எல்லோரையும்போல் காப்டன் ஹயக்ரீவனும் தம் இளம் வயது மனைவியின் திருப்தியில், அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் அதிக சிரத்தைக் காட்டினார்.
ஆற்றிலே தண்ணீர் இல்லை. கோடையின் கண்ணாடிப் பரப்பில் ஆற்றின் வெற்று மணல் வெளி...! கண் புத்து விடுவதுபோல் ஜொலித்தது. ஷில்லாங்கிலிருந்து மூன்று நாள் பயண அலுப்பை சகித்துக்கொண்டு இந்த வெயிலையும், இங்கே நிலவும் வெறுமையையும் சகிக்க ராதா பள்ளிகொண்டா வந்ததற்குக் காரணம், புஷ்பப் பல்லக்கு மட்டும் அல்ல, கண்ணன்...! அவனைப் பார்க்கவேண்டும். அவன் என்ன ஆனான்? எப்படி இருக்கிறான்?
காப்டன்... நான் ஒரு நடத்தை கெட்ட மனைவி அல்ல. ஐ ஆம் சின்ஸியர் டு யூ...! ஐம் நாட் அப்ஸொல்யூட்லி டெடிகேட்டட்...! அப்படியிருந்தா ரொம்ப நன்னாருக்குதான். இட்ஸ் இம்பாஸிபிள்... காரணம் அப்படி இருக்கறதுன்னா... என்னன்னு உங்களுக்கே தெரியாது, எடுத்துச் சொன்னா அது தேலையில்லே... அது வெறும் பார்மாலிட்டிம்பேள்...
அக்கரையிலே ஹைதர்புரத்திற்கும் வேப்பூருக்கும் அப்பால் குடியாத்தம் வரியாக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ராதா தவறவிட்ட ரயிலை நினைவூட்டிக் கொண்டே அவை ஓடுகின்றன. கண்ணன் எங்கே? ராதா டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டிற்குப் போய் வந்தாள். பொறுமையோடு... பாவிலே அறுந்த நூலிழைகளை இழந்துவிட்ட தங்கள் இறந்த காலங்களைக் கண்ணொளி மங்கியபடி தேடி விளக்கிக் கொண்டிருந்த செங்குந்தர் வீதி வழியே... நெசவாளர் மத்தியிலே நடந்து..., ஈஸ்வரன் கோயிலைச் சுற்றிக்கொண்டு லீனாலைப் பார்க்கப் போனாள். பேச்சு வாக்கிலாவது கண்ணனைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறதா என்று...! 
எல்லோருமே அவளை ஒரு மாதிரி பார்த்தார்கள். அவளுக்கும் கண்ணனுக்கும் இருந்த எதையோஅறிந்தவர்கள்போல..., ஒருவேளை அது தன் கற்பனையா? நடந்துகொண்டே போனபோது தோள்மீது ஆதுரமாக ஒரு கை வந்து விழுந்தது.
லீனா கேமரான் பேட்டைக்காரி; கிறிஸ்துவப் பெண்; பள்ளித் தோழி; கண்ணனோடு படித்தவள்; அவனுக்கும் ராதாவுக்குமான உறவு மொட்டுவிடும் முன்பே ஊகித்தவள்; பின்பு அதன் ஒவ்வொரு வடிவத்தையும், பரிமாணத்தையும் அறிந்துகொண்டு அதற்குத் தன்னால் முடிந்த அறிவுரை ஆலோசனைகளைச் சொன்னவள்.
“கண்ணன் கொஞ்சம் கருப்பு இல்லே...?” வேண்டுமென்றே ராதாஅவளைக் கிண்டினாள். அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துகொள்ள..! 
அப்போது, “ஆமா... இப்ப வந்து அபிப்பிராயம் கேளு...! கருப்பா இருந்ததால தானே அவனை உனக்குப் பிடிச்சுது...! உங்க அண்ணா வெளுப்பா இருந்ததால காந்தாவுக்குப் பிடிச்ச மாதிரி...”
அந்தக் கேள்வியை ராதா கேட்டபோது, ஸ்ரீதரன் காந்தாவோடு ஊரைவிட்டு வெளியேறி விட்டிருந்தான்.
ராதாவின் முகம் மாறியது. “நீ மட்டும் என்ன..., கழுக்கு மொழுக்குன்னு பந்தயக் குதிரையாட்டம் இருக்கே. உனக்கும் ஒருத்தன் கெடைப்பான்...” ராதா பேச்சை மாற்றினாள்.
“ரொம்ப லேட்டா சொல்றியே...”
லீனா ராதாவின் தோள்மீது முகம் புதைத்துக் கொண்டாள். அவளது பரத்த உதடுகளில், வெடித்த விம்மல் ராதாவின் தோள் சதையைச் சிலிர்க்க வைத்தது, ராதாவின் கை அவள் முதுகை அழுத்திப் பிடித்துக்கொண்டது. அப்போதுதான் லீனா ஏன் கண்ணனுக்கும் தனக்குமான நெருக்கத்தை அவ்வளவு கரிசனமாக வளர்த்து வந்தாள் என்று புரிந்தது.
“எல்லாமே விசித்திர விசித்திரமாத்தான் நடந்துட்டிருக்கு...” ராதா அவள் முதுகின் மீதிருந்த கையை எடுத்து ஆள்காட்டி விரலால் லீனாவின் முகத்தை நிமிர்த்தினாள். லீனாவின் கண்கள் நிராசையால் குளம் கட்டியிருந்தன. அவள்கன்னத்தோடு தன் கன்னத்தை இழைத்த ராதாவால், லீனாவின் கழுத்தைச் சுற்றிய கையை எடுக்க முடியவில்லை.
இழந்து போனபின் மறைத்து ஸ்ரீதரன்மீது அவளுக்கு இருந்த மயக்கத்தை மறந்துவிடாமல் தன்னிடம் பகிர்ந்துகொள்ளத் தோன்றிய அவளது நேர்மை ராதாவைத் தொட்டு அசைத்தது.
கண்ணன் ராதாவிடம் வந்து புறப்படுவதற்கு நேரம் குறித்துவிட்டுப் போனதும் அவள் நேராக லீனா வீட்டிற்குத்தான் ஓடினாள்.
வீட்டில் கன்னிமேரி படத்தின் முன் லீனா முழந்தாளிட்டு ஜபம் செய்து கொண்டிருந்தாள்.
முடிந்ததும் லீனா திரும்பிப் பார்த்துவிட்டு எழுந்து நின்றாள்.
“என்ன...”
ராதா சுருக்கமாக விஷயத்தைச் சொன்னாள்.
“நான் என்ன செய்யட்டும் லீனா?”
“நான் சொல்லணுமா...? ஏன்? உனக்கே ஒன்னும் தோணலியா...?”
“ஒரு முடிவுக்குச் சட்டுன்னு வர முடியலே”
“போ...”
“என்ன சொல்றே?”
“கேட்டே... சொன்னேன்.”
“அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் ஸ்ரீதரன் பண்ணிட்டுப் போனது இன்னும் ஆறல்லே...”
ஈட்டி சொருகுவதுபோல் லீனா ஒரு பார்வை பார்த்தாள். ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். பிறகு “போகாதே...!” என்றாள். 
“என்ன...”
“பின்னே, ரெண்டே ரெண்டுதான் சாய்ஸ்...! போறது, போகாம இருக்றது...! முடிவு பண்ணவேண்டியது நீ...! ரெண்டுத்துக்கும் பின்விளைவு இருக்கு. ரெண்டுமே லைப் பூரா பாதிக்கறதுதான்...! நான் சொல்லி எதுவும் நடக்கப் போறதில்லே...”
பத்து நிமிடம்... ராதா லீனா வீட்டில் கண்ணீர் சிந்திவிட்டுத்தான் வெளியேறினாள்.
அப்போது வெளியேறியவள்அதற்குப்பின் தன் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டுதான் வந்தாள். லீனா பத்திரிக்கையை வாங்கிக் கொண்டதும், அவள் கையைப் பிடித்தாள்...! அவர்கள் பார்வையில் என்னென்னமோ அர்த்தங்கள் பரிமாறப்பட்டன.
அடன் பிறகு வெகுநாள்கள் கழித்து ராதா அந்தப் பயணத்தில் தான் லீனாவைப் பார்க்க வந்தாள்.
லீனா சட்டேன்று ஊகித்துக் கொண்டாள். கண்ணன் பற்றிய தகவல் கேட்கத்தான் அவள் வந்திருக்கிறாள் என்று...!
“ராதா, கண்ணன் நக்ஸலைட் ஆயிட்டானாம். ரெண்டு தரம் போலிஸ் அவனைத் தேடிட்டு வந்ததாம்.”
ராதாவுக்கு அது குற்றச்சாட்டாகப் பட்டது. கண்ணனுக்கு அவள்தான் வேர். அவனது கொந்தளிப்பை, குமுறல்களைக் கட்டுப்படுத்தி அவனைப் பூமியோடு பதிய வைத்த வேர், அது அறுந்து போயிற்று. சமூகத்தின்மீது பிறந்தது முதல் அவனுக்கு கோபம்..., நியாயமான கோபம்...! கோபத்திற்கு என்ன நியாயம் வேண்டியிருக்கிறது? அதைத் தணிப்பதற்கு ஒரேயடியாகக் குளிர் நீர் ஊற்றி அணைப்பதற்கு அவள் கிட்டவில்லை. கிட்டாமல் போன கோபம் அவனைக் கொந்தளிக்க வைத்திருக்கலாம்.
மனதுக்குள் ராதா கண்ணனிடம் பேசினாள்.
“கண்ணா... நீ இந்தப் பாதையை ஏன் தேர்ந்தெடுத்தாய்? என்னாலா...? இப்படி நினைப்பது ஒருவேளை என் கர்வம் ஆக இருக்கலாம். ஆனால் நான் உன்னோடு அன்று புறப்பட்டு வந்திருந்தால்... நீ நக்ஸலைட் ஆகியிருக்க மாட்டாய். உன்னை நான் ஆக விட்டிருக்க மாட்டேன். அப்போது என்னவாயிருப்பாய்? உன்னை நான் பி.எல். படிக்க வைத்திருப்பேன்... அப்புறம் நீ இந்த ராதாவுக்காக, என்னைச் சுகமாக வைத்திருப்பதற்காக என்னென்ன பாடுபட்டிருப்பாய். என்ன சுயநலம். உனக்குள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமூக அநீதியின் அக்னியைக் குளிர்வித்து உன்னை நீயே பனிக்கட்டியாக்கி, உன்னை நம்பி ஓடி வந்தவள் என்ற காரணச் சங்கிலியாலே என் கட்டிலிலே உன்னைப் பிணைத்து வாலாட்டிண்டு நிக்கறவனாக்கி இருப்பேனோ...! சே... சகிக்லை கண்ணா, உன் வழியிலே நீ தீப்பந்தம் ஏந்தி நடக்கும்போது நான் தடையாக இருந்திருப்பேன்.”
சூசூசரி கண்ணா... எல்லாம் மிகவும் சரி...நடந்ததெல்லாம் விதிப்படியே நடந்திருக்கிறது. காதலிப்பதற்கு இங்கே தினந்தோறும் பலர் பிறந்து கொண்டிருக்கிறார்கள். பிரியமானவளின் விருப்பங்களைப் பூர்த்திசெய்ய பண வேட்டையாடி வனவிலங்குகளாய் அலைந்து குடும்பம் நிலைநாட்ட இங்கே பலர் பிறந்து கொண்டிருக்கிறார்கள். அநீதிகளைக் கண்டு குமுறி எழுகின்ற அக்னி மட்டும் இங்கே அபூர்வம் கண்ணா. எந்தப் பாதை தவறு, எந்தப் பாதை சரி என்று தீர்மானிக்க எனக்கு என்ன உரிமை? என்ன தகுதி? போ... எங்கே போனாலும் நீ வழி தவறமாட்டாய் வழி தவறினால் அதை வந்துவிட்ட தோஷத்திற்காக ஏற்றுக் கொள்ளவும் மாட்டாய்... திரும்பி விடுவாய். செய்த பிழையைத் தைரியத்தோடு ஒப்புக் கொள்வாய்...”
“ஆனால் கண்ணா... நீ என்னாலா நக்ஸலைட் ஆனாய்...?”
…..
உற்சவ கோலாகலம் முடிந்து உலாப்போன களைப்பில் பள்ளிகொண்டபெருமாள் அனந்த சயனத்திலிருந்தார். விச்ராந்தி. மறுநாள் ராதா ஊருக்குப் புறப்படுகிறாள் என்பதற்காக பட்சணங்கள், ஊறுகாய், வடாம், வற்றல் என்று வீடு தடபுடல் பட்டுக் கொண்டிருந்தது. அப்பா..., தம்பி தங்கைகளை அழைத்துக்கொண்டு எங்கோ போயிருந்தார்.
பெரியம்மாவும், அம்மாவும் தான் அடுக்ளைக்கும் முற்றத்திற்குமாக ஓடியாடிக் கொண்டிருந்தனர். காப்டன் அப்பாவின் அறையில் தூங்கிக் கொட்டிருந்தார். மின் விசிறி இரைந்து கொண்டிருந்தது.
சூசூகொஞ்சம் வடுமாங்காய் வக்யறேன். உப்பிலே ஊறப் போட்டது. தாளிதம் பண்ணக் கூடப் போறதில்லே. நீங்க ரெண்டு போரும்தான் அங்கே குழந்தைகுட்டிகளை விட்டுட்டு வந்தவாளாட்டம் றெக்கை கட்டிண்டு பறக்கிறேளே...!”
அம்மா பிளாஸ்டிக் டப்பாவில் கல் சட்டியில் ஊறிக்கொண்டிருந்த வடுமாங்காயை உப்பு நீர் இறுத்து, ஸ்பூனில் ஒவ்வொன்றாய் அள்ளிப்போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இரண்டு மூன்று நாளாய் தொண்டைக்குள் சிக்கியிருந்த கேள்வி ஒன்று வெளிவர சந்தர்ப்பம் தேடியது. அம்மாவின் கரிசனத்தை ரசித்துக்கொண்டு ராதா வாசற்படி மீது உட்கார்ந்திருந்தாள்.
"மாசாமாசம் இன்னும் குளிச்சுண்டுதான் இருக்கயாடி...?”
அம்மாவின் ஏக்கத்தைப் பார்க்க ராதாவுக்கு வேடிக்கையாக இருந்தது.
தாய் மகளிடம் வாய்விட்டுக் கேட்க முடியாத கேள்வி. காப்டனுக்கு வயசு ரொம்ப அதிகமாய் விட்டதோ? மின் விசிறியின் உறுமலையும் மீறி காப்டனின் குறட்டை கேட்டது. சூஅம்மாவின் கேள்விக்கு அந்தக் குறட்டை பதில் சொல்கிறது’ 
ராதா வெட்கப்படுவாள் என்று அம்மா எதிர்பார்த்தாள். அவளோ சிரித்தாள். அடுக்களையில் பட்சணம் தயாரித்துகொண்டிருந்த பெரியம்மாவுக்கு ஓசை கேட்காத மாதிரி சிரித்தாள். ரிஷிபத்தினி மாதிரி எதையோ கடந்து விட்ட சிரிப்பு.
“என்னடீ சிரிக்கறே...?”
“வேற என்ன பண்ணச் சொல்றே?”
சிரிப்பினூடே விரக்தி ஒளிந்திருக்கிறது. அம்மா சூட்சுமமாகக் கண்டுபிடித்து விட்டாள்.
வடுமாங்காய் அள்ளிப்போடும் கை சோர்ந்துவிட்டது. அம்மாவின் நெஞ்சு குமுறுவது குங்குமம் துடிப்பதில் தென்பட்டது.
“என்னம்மா கேள்வி இது...?” மறுபடியும் நெற்றியைக் கையால் லேசாக அடித்துக் கொண்டே சிரித்தாள். அம்மாவின் சந்தேகங்களை அகற்றுவதுபோல அவள் சிரித்தாள்.
ஒரு வெள்ளித்தட்டில் தேன்குழலும் சீடையுமாக பெரியம்மா வெளியே வந்தாள்.
“மாப்பிள்ளைக்குக் கொண்டுபோய்க் கொடுடீ...”
“மணி ஐந்தாகப் போகிறது. குடியாத்தத்திற்குக் குழந்தைகளை எல்லாம் சினிமாவுக்கு அழைத்துப் போவதாகச் சொன்னார். இன்னும் தூங்குறாரே...!”
பட்சணத் தட்டோடு ராதா அவர் அறைக்குள் நுழைந்தாள். கயிற்றுக் கட்டிலில் ரோமம் நரைத்த மார்போடு பீமாகாரமாக காப்டன் ஹயக்ரீவன் மல்லாந்து தூங்கிக் கொண்டிருந்தார். பெரிய ஆகிருதி. கையும் காலும் மார்பும் முகமும் எல்லாம் பெரிசு... பெரிசு... பெரிசு. ராதா அவர் வயிற்றில் ஓங்கிக் குத்தி அவரை எழுப்பினாள்.
‘ஹோவ்..’ என்று கத்திக்கொண்டே எழுந்தார் காப்டன்.
“இப்ப எப்படி இருக்கு தெரியுமா? ப்யூட்டி அண்ட த பீஸ்ட்போல இருக்கு.” அவர் சிரித்தார்.
“காப்டன், ஔறி வழிய ஆரம்பிச்சா விஸ்கி இல்லாமயே ஔறி வழியறேள்” அவர் முகம் சிறுத்துவிட்டது.
“என்னம்மாஇன்ஸல்டிங்கா சொல்லிட்டே?”
“யூ இன்ஸல்டட் யுவர் செல்ஃப்”
“ஸாரி”
அவர் முகம் தவறிழைத்ததுபோல தொங்கிப் போயிற்று. அவளுக்கு ஷில்லாங் ஞாபகம் வந்தது.
ஷில்லாங்கிலே குளிர் கொடுமை. பெட்ரூமில் ஹீட்டர் இரவெல்லாம் தேவைப்படும். ரஜாய்..., அதற்குமேல் ஒரு கம்பளி. பக்கத்திலே பெரிய ஆகிருதியோடு காப்டன் பியூட்டி அண்ட் த பீஸ்ட் சிக்கனும் பெரடும் பிரமோஷனும் ஆபிஸர் மெஸ்ஸும், பார்ட்டிகளும் எவ்வளவு சீக்கிரமாக, யாந்திரீகமாக இவர் தூங்கி விடுகிறார்...?
“பேபி ஆம் ஐ ப்ரூடல்?”
பதிலில்லை. பதில் சொல்வதற்காக ராதா விழித்துக் கொண்டிருப்பாள். செவ்வரியோடிய கண்போல், ராதாவின் மனசில் விழித்திருக்கும் கனல்போல் ஹீட்டர் விழித்திருக்கும். ஹரி குறட்டை விடுவார்.
ராதா விழித்திருப்பாள். ஹயக்ரீவனின் குறட்டையைக் கேட்டவாறே விழித்திருப்பாள்.
“ ஏன்னா ... எழுந்திருங்கோ. மணி அஞ்சாகப் போறது...”
ஷில்லாங்கிலிருந்த காப்டன் மனைவி அய்யங்கார் வீட்டு ஆசாரத்தோடு பள்ளிகொண்டாவிற்குத்திரும்பி அவரை எழுந்து உட்காரச் சொன்னாள் [தொடரும்]