Saturday, 24 June 2017

தீக்குளிக்காத விட்டில்கள்-1


------------------
                             1
Sweated; in the back of the neck. And inside the banian. Under each hair root. Removing off the vest and throwing it down into the deep well he wished to make a deep dive from the stone plate he stood on. 
"Wait" He gave a command to the itching. 
 பின்னங் கழுத்தில். பனியனுக்குள், உடம்பின் ஒவ்வொரு மயிர்க் காலிலும்...
பனியனையும் உரித்துச் சுருட்டிக் கிடாசி விட்டு அப்படியே கிணற்றில், நிற்கிற திட்டிலிருந்தே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.
பொறு! அவன் உடம்பு அரிப்புக்குக் கட்டளையிட்டான். கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்தது. ஸ்பேனரை ஸக்ஷன் பம்ப் கட்டை மீது வைத்து லுங்கியை இறுகக் கட்டினான்.
இன்னும் இரண்டு சுற்று சுற்றினால் அந்த நட்டு இறுகிவிடும். ஸ்பானர்தான் வழுக்குகிறது. கொஞ்சம் வாய் விரிசல். இருந்தாலென்ன? கௌதமுக்குச் சவால்கள். இப்படிச் சின்னச்சின்ன இடைஞ்சல்கள் பிடிக்கும்.
கௌதம் இரண்டு சுற்று வழுக்கி வழுக்கி டைட் வைத்தான். ஸக்ஷன் பம்பின் நட்டு, மாடு பிடித் திருவிழாவில் பிடித்து நிறுத்திய காளை மாதிரி ஸ்தம்பித்தது.
அவன் ஸ்பானரைக் கீழே வைத்தான். நெற்றி வியர்வையை விரல் வைத்து வழித்தெறிந்தான்.
ஏழு மணிக்குக் கிணற்றில் இறங்கியது. ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம்.
போனது ஃபுட் வால்வ் லெதர் என்று தெரியாமல் ஆதிகேசவன் அலைமோதிவிட்டான். கார் நெல்லுக்கு அன்றாடம் நீர் பாய்ச்ச மோட்டார் பம்ப் கை விட்டு விட, பழைய பாணியில் கவலை மாடுகளை நம்பினான்.
ஏழு நாட்களாக மோட்டார் சப்தம் ஓய்ந்து போன கிணற்றில் இனி அது பலிக்கும்.
ஆதி கிணற்றுக்கு மேலே தான் நின்று கொண்டிருப்பான். கௌதம் உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.
ஆதி... மோட்டாரைப் போடு.
கிணற்றின் சுற்றுச் சுவரில் பட்டுப்பட்டு எதிரொலிகள். ஒன்று, இரண்டு, மூன்று முறை... பதில் வரவில்லை. எங்கே போய்விட்டான்?
தன் சிரமம் பலித்திருக்கிறதா என்று கௌதமுக்கு உடனே முடிவை எதிர்பார்க்கும் தவிப்பு. மேலே போகலாமா? ஸ்பானரை எடுக்கக் கௌதம் குனிந்தபோது அவன் முதுகில் லொட்டென்று குறி பார்த்து அடித்த மாதிரி எதுவோ தாக்கியது. முதுகைத் தாக்கிவிட்டு அந்த ஏதோ ஒன்று தாவி விழுந்து தண்ணீரில் மறைந்தது.ஒண்ணு  செய்வமா?”
முன்னால் அவள் - ராதா. பின்னால் அவன் - கண்ணன்.
காலில் அணிந்திருந்த மிதியடி ஓசை சர்ர்ர்ரக்... சர்ர்ர்ரக் என்று அவர்கள் மவுனமான மனோலயத்தைக் குலைப்பதைப்போல கிறீச்சிட்டது.
சொல்லு என்றான் கண்ணன்.
செருப்பைக் கழட்டிக் கையிலே எடுத்துக்குவமா?‘
ஏன்?‘
என்னமோ யாரோ ஃபாலோ பண்றாப்பிலே ஒரு ஃபீலிங்.‘
"“ஃபீலிங் தானே?”
அந்த இருவரும் அந்தி மயங்கிய நடு ஆற்றில் நடந்து கொண்டிருந்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லை. மாட்டு வண்டிகள் போன சுவடுகளும் லாரிகள் குறுக்கே ஆற்றைக் கடந்த வண்டிச் சுவடுகள். குசஸ்தலை ஆறு மழை வெள்ளத்திற்காக ஒரு பகீரதனை எதிர்பார்த்தது. அங்கே வெள்ளம் வந்து கரைகள் முழுகிய பழங்கதையைப் பெரிசுகள் பொழுது போகாத  ஆற்றாமையில் இன்னும் புலம்பிக்  கொண்டிருக்கிறார்கள்
இப்போது மிஞ்சியிருப்பது ஆற்று மணல். அது கூட மக்கள் மிதித்து மண்ணாகி மடிந்து கொண்டிருக்கிற மணல். எப்போது அள்ளலாம் என்று மணல் கொள்ளைக்காரர்கள் காத்திருக்கும் மணல்.
மணல் பாதத்திலே நெரி படற சொகம் தனி கண்ணா.”
ராதா தான் போட்டிருந்த நீல ஹவாய் செருப்பைக் கழற்றிக் கையில் எடுத்துக்கொண்டாள்
அவனும். பழுப்பு ஹவாய் 
இருவரும் மணல் பாதத்தில் மிதிபடுகிற ஸ்பரிச சுகத்தையும் ஓசை நயத்தையும்  அனுபவித்தபடி சிறிது தூரம் நடந்தனர். ஆங்காங்கே கோரை முளைந்திருந்த ஒரு பகுதியில் காய்ந்த மணலில் எதிரெதிராக அமர்ந்தனர்.
கண்ணன் தொடங்கினான்.
இப்படியே ஆத்தங்கரை, கோயில், ஸ்கூல் கிரவுண்டுன்னு பொழுது போக்கா திருட்டு லவ் பண்ணிக்கிட்டே போயி கடைசியிலே ஒரு நாளைக்கு  ஆம் டெரிப்ளி ஸாரி கண்ணா. எங்க வீட்டிலே எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு கைகழுவறதா உத்தேசமா ராதா?”
துப்பட்டாவை எடுத்து கழுத்தின்மீது சுற்றிக்கொண்டே ராதா கண்ணனை நெற்றி சுளித்துப் பார்த்தாள். வெகு தூரம் நடந்து வந்ததால் தொடை வலித்தது. கால்களை நீட்டி இரண்டு கைகளைப் பின்னால் ஊன்றிக்கொண்டு நீட்டி முறித்தாள்.
ஓடிப் போயிடலாமா?” கிண்டலாக உதடுகளை முறுக்கிக்கொண்டு கேட்டாள். அவள் அழகு கூடுதலாகி கண்ணனை இம்சித்தது.
அவன் எழுந்து அந்த உதடுகளை நெருங்க முயன்றான். அருகே வந்த முகத்தை கையை எடுக்காமல் தலையாலேயே முட்டித் தள்ளிவிட்டு, என்னமோ சீரியஸா ஆரம்பிச்சே... இப்ப இதுக்கு அவசரம் வந்துடுத்து உனக்கு?
கண்ணன் கட்டாயப் படுத்தவில்லை. ஆனால் நீட்டியிருந்த அவள் கால் தொடைகள்மேல் படுத்துக் கொண்டான்.
தலையை இடதும் வலதும் புரட்டிக் கொண்டே, ஆரம்பிச்சாச்சு! இதுக்கு ஒரு எண்டிங் வேணும். ஓடித்தான் போகணும்னா எனக்கு ஒரு அப்ஜெக்ஷனும் இல்ல.”
அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இரண்டு கைகளையும் பின்னாலிருந்து எடுத்துக் கொண்டாள். அவன் தலைமீது கைவைத்து வைத்து தலைமுடியைச் செல்லமாகச் சிலுப்பி விட்டாள். அவனது பருத்த உதடுகளின்மீது ஆள்காட்டி விரலால் தடவினாள்.
பாவம் ஏமாந்துட்டே இல்லே?” என்று கேட்டுவிட்டு, அவன் எதிப்பாராமல் குனிந்து அந்த உதடுகளின்மீது கவிந்தாள். அவை சீக்கிரம் பிரிந்துவிடாதவாறு கண்ணனின் கைகனை விலக்கிக்கொண்டே விலகினாள்.
ஓடித்தான் போயாகனும். அப்பா கிட்டயோ, பெரியப்பா கிட்டயோ போய் நின்று கண்ணனைத்தான் நான் லவ் பண்றேன். அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஸீன் போட்டுண்டு என்னால் நிக்க  முடியாது.”
"எப்ப போகலாம் ராதா?”
"எங்க போகலாம்னு சொல்லு கண்ணா?”
"நீ சொல்லு
"மும்பை... கொல்கத்தா.... புனே.... சென்னை...?”
"ஏன் மஞ்சவாடி... பாப்பாரப்பட்டி... இதெல்லாம் பிடிக்காதோ?’
"என்ன பாடி... வாடி..சட்டி பட்டின்னு. வில்லேஜுங்களா சொல்றே?”
''சரி... கோட்டயம்...?
"கேரளா...?
"ஆமாம்...வேற சாய்ஸ்  மூணார்..
"சரி... எப்போ?"
"நாளைக்கு...?"
"கொஞ்சம்  எக்ஸ்டென்ஷன்  கொடு."
"உன்னை நான் செல்லிலே கால் பண்றேன்."

பத்து நிமிஷத்தில் அவர்கள் இருவரும் ஆற்றுமணலில்  நடந்து கரையேறினார்கள்.[தொடரும்]

No comments:

Post a Comment